சிவப்பு தண்டுக்கீரையானது அதன் தண்டுகள் சிவப்பு நிறத்தில் உள்ளதால் அந்த பெயர் பெற்றது. கீரை வகைகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் கீரைகளில் இந்த சிவப்பு தண்டுக்கீரையும் ஒன்று, எனவே தான் பெரும்பாலானோர் சிவப்பு தண்டுக்கீரை வளர்ப்பு செய்கின்றனர். இந்த சிவப்பு தண்டுக்கீரையின் தண்டுகள் மற்றும் இலைகள் ஆகிய அனைத்துப் பகுதிகளுமே உணவாகப் பயன்படுகிறது. நல்ல செழிப்பான இடங்களில் 6 அடி வரை உயரம் வரை வளரக் கூடியது இந்த சிவப்பு தண்டுக்கீரை.
சிவப்பு தண்டுக்கீரை பயன்கள்
இந்த பதிவில் சிவப்பு தண்டு கீரை வளர்ப்பது எப்படி, சிவப்பு தண்டுக்கீரையில் இருந்து விதை சேகரிப்பது எப்படி, சிவப்பு தண்டுக்கீரை வளர்ப்பு முறை மற்றும் பயன்கள் மற்றும் சிவப்பு தண்டுக்கீரை சாகுபடி முறை மற்றும் பயன்கள் ஆகியவற்றை பற்றி காண்போம்.

மண் வளம்

மண் வளம்
செம்மண் சிவப்பு தண்டுக்கீரை செழித்து வளர ஏதுவான மண் ஆகும். நல்ல நிலையில் உள்ள செம்மண் 40 %, நன்கு மக்கிய தொழு உரம் 40 % மற்றும் மண்புழு உரம் 20 % ஆகிய மூன்றையும் சேர்த்து மண்கலவை தயார் செய்யவேண்டும். மண்புழு உரம் கிடைக்கவில்லை என்றால் தழை, இலை சருகுகளை கூட பயன்படுத்தலாம். தயார் செய்து வைத்துள்ள இந்த மண்கலவையை நெகிழிப்பை அல்லது சிறிய தொட்டியில் போட்டு நிரப்பி கொள்ளவும்.

சிவப்பு தண்டுக்கீரை நடவு செய்தல்

சிவப்பு தண்டுக்கீரை வளர்ப்பு
சிவப்பு தண்டுக்கீரை நடவு செய்ய சித்திரை, ஆடி, மார்கழி மற்றும் மாசிப்பட்டங்கள் சிறந்தவையாகும். சிவப்பு தண்டுக்கீரையில் இருந்து நேர்த்தியான விதைகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். இதன் விதைகள் கருப்பு நிறத்தில் சிறிது சிறிதாக இருக்கும், அதை நாம் தயார் செய்து வைத்துள்ள மண்கலவையில் போட்டு மூடி, அதன் மீது பூவாளிக்கொண்டு நீர் தெளிக்க வேண்டும், அதிகமாக நீர் ஊற்றினால் விதை வெளியே வந்துவிடும் எனவே கவனமாக நீர் ஊற்றவும்.

5kg  Vermi Compost icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மண்புழு உரம் பை

இயற்கை முறையில் உங்கள் தோட்டத்திலுள்ள செடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையை அதிகரிக்கும் மண்புழு உரம். மிக குறைந்த விலையில்!

 Buy Now

சிவப்பு தண்டுக்கீரை சாகுபடி

பயிர் பாதுகாப்பு
விதைத்த 2 நாளிலே சிவப்பு தண்டுக்கீரை வெளியே முளைத்து வர தொடங்கிவிடும். நாளாக நாளாக அதன் வளர்ச்சி நன்றாக அமையும். சுமார் 30 நாள் முதல் 40 நாளில் சிவப்பு தண்டுக்கீரையை அறுவடை செய்து கொள்ளலாம். சாகுபடி செய்யும் சமயத்தில் கீரையின் உச்சியில் பூவும், அதனோடு சேர்ந்து விதைகளும் இருக்கும், எதிர்கால தேவையை கருத்தில்கொண்டு அந்த விதைகளை சேகரித்து வைக்கலாம்.

பயிர் பாதுகாப்பு

பொதுவாகவே கீரைகளில் பூச்சிகள் அதிகமாக காணப்படும். இந்த பூச்சி தாக்குதலால் சிவப்பு தண்டுக்கீரையின் வளர்ச்சி தடைபட கூடும். இந்த பிரச்சனையை எளிதில் சரிசெய்ய முடியும். இஞ்சி, பூண்டு கரைசலை நீரில் கலந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதன் மூலம் பூச்சி தாக்குதல் படிப்படியாக குறைந்து விடும்.

neem oil icon

இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

சிவப்பு தண்டுக்கீரை பயன்கள்

  • சிகப்பு தண்டுக்கீரை கீரையை பொரியல் அல்லது கூட்டு செய்து தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் தேவையில்லாமல் தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவும்.
  • பித்த நீரின் பாதிப்பால் உடலில் ஏற்படும் கை கால் வீக்கம் மற்றும் முக வீக்கம் ஆகியவற்றை எளிமையான முறையில் இந்த சிகிப்பு தண்டுக்கீரை சரிசெய்யும் திறன்கொண்டது.
  • சிவப்பு தண்டுக்கீரை உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்க வல்லது, உடல் உஷ்ணத்தால் சிரமப்படுகிறவர்கள் சிவப்பு தண்டுக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் நல்ல நிவாரணம் பெறலாம்.
  • சிலருக்கு உடற்பருமன் அதிகமாக இருக்கும், எவ்வளவு தான் முயன்றும் உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த சிவப்பு தண்டுக்கீரை அரும்மருந்தாகும். இதை அடிக்கடி உணவில் சேர்த்துகொண்டுவந்தால் உடல் எடை குறைவதை கண்கூடாக பார்க்கலாம்.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகும்.

எண்ணிலடங்கா நற்பலன்களை கொண்ட இந்த சிவப்பு தண்டுக்கீரையை மாடித்தோட்டத்தில் வளர்த்து அதன் முழு பலன்களையும் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.

Comments are closed.

Pin It