அனைத்து நிலங்களிலும் சித்தரத்தை வளர்ப்பு செய்யலாம், இது ஒரு செடி வகையைச் சார்ந்த தாவரமாகும். இதன் தாயகம் தெற்கு ஆசியா. பின்னாளில் மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்குப் பரவியது. இந்த சித்தரத்தை இஞ்சி வகையை சேர்ந்த செடியாகும். வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் மூலிகைகளில் சித்தரத்தை முக்கியமானதாகும், இதனை அலோபதி மருந்துகளாக தயாரித்து நமது நாட்டிலேயே விற்பனை செய்கின்றனர்.
சித்தரத்தை வளர்ப்பு
சித்தரத்தை செடி வளர்ப்பது எப்படி, சித்தரத்தை வளரியல்பு, சித்தரத்தை எப்படி பயன்படுத்துவது மற்றும் சித்தரத்தை மருத்துவ குணங்கள் ஆகியவற்றை பற்றி விரிவாக இக்கட்டுரையில் காண்போம்.

மண்ணின் தன்மை

சித்தரத்தை எல்லாவகை மண்ணிலும் வளரும் பண்பை பெற்றிருந்தாலும் நல்ல ஆரோக்கியத்துடன் செழித்து வளர சிறந்த மண்கலவையை அதற்கு அளிக்க வேண்டியுள்ளது. சித்தரத்தை நடவு செய்வதற்கு, 40 சதவிகிதம் செம்மண், 40 சதவிகிதம் மக்கிய தொழுஉரம், 20 சதவிகிதம் மணல் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து மண்கலவை தயார்செய்து கொள்ளவும். இவ்வாறு செய்வதினால் சித்தரத்தை வளர்ப்பு சிறக்கும்.

5kg  Vermi Compost icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மண்புழு உரம் பை

இயற்கை முறையில் உங்கள் தோட்டத்திலுள்ள செடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையை அதிகரிக்கும் மண்புழு உரம். மிக குறைந்த விலையில்!

 Buy Now

சித்தரத்தை நடவு

சித்தரத்தை செடி
தயார் செய்து வைத்துள்ள மண்கலவையை நெகிழிப்பை அல்லது மண்தொட்டியில் போட்டு நிரப்பிக்கொள்ளவும். மாடித்தோட்டத்தில் நல்ல சூரிய வெளிச்சம் கிடைக்கும் இடமாக பார்த்து தேர்வு செய்து தொட்டியை அங்கு வைக்கவும், பின்பு அதில் பள்ளம் பறித்து சித்தரத்தை அதில் நடவு செய்யவும். ஒரு வருடம் வரை பலனை தரக்கூடியது இந்த சித்தரத்தை மூலிகை.

சித்தரத்தை வளரியல்பு

சித்தரத்தை
சித்தரத்தை சுமார் ஐந்து அடி உயரம் வளரக்கூடியதாகும். இதன் இலைகள் பசுமையாக நீண்டு வளரும் குணத்தைக்கொண்டிருக்கும். கொத்து கொத்ததாக பக்கக்கிளைகள் படர்ந்து வளரும். இதன் வேர் பகுதியில் கிழங்குகள் பரவிக்கொண்டே இருக்கும், இதனால் புதிய செடிகள் பக்க வாட்டில் வளர்ந்தபடியே இருக்கும்.

இதன் வேரில் விளைகின்ற கிழங்கில் மருத்துவ குணம் மிகுதியாக உள்ளது. இந்தக் கிழங்கு மிகவும் உறுதியாக இருக்கும், குறுமிளகின் வாசத்தை கொண்டிருக்கும், இதில் வரும் பழம் சிவப்பு நிறத்தில் இருக்கும். இதன் பக்கக் கிழங்குகள் மூலமாக சித்தரத்தை இன விருத்தி செய்யப்படுகின்றன.

சித்தரத்தை அறுவடை

சித்தரத்தை கிழங்கு
நடவு செய்த நாளிலிருந்து சுமார் 200 நாட்களில் சித்தரத்தை அறுவடை செய்யலாம். கிழங்குக்கு சேதம் ஏதும் ஏற்படாமல் அறுவடை செய்திட வேண்டும். நெகிழிப்பையில் உள்ள மண் கடினமாக இருக்கும் பொழுது கிழங்கை வெளியே எடுக்க முயற்சித்தால் கிழங்கு காயம்பட வாய்ப்புள்ளது எனவே அந்த மண்ணை இலகுவாக்கி பிறகு கிழங்கை வெளியே எடுத்து விட்டு மீண்டும் செடி நடவு செய்யலாம் செடி மீண்டும் வளர்ந்து வந்துவிடும்.

1kg neem cake

இப்போதே வாங்குங்கள்!! வேப்பம்புண்ணாக்கு கட்டி

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

சித்தரத்தை மருத்துவ பயன்கள்

சித்தரத்தை கிழங்கு

  • சித்தரத்தை கோழை மற்றும் கபத்தை அகற்றுவதில் பழங்காலம் முதலே முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது, மேலும் உடல் வெப்பத்தை நீக்கும் மற்றும் பசியை தூண்டும்.
  • சித்தரத்தை பொடி செய்து 2-4 கிராம் எடுத்துக்கொண்டு, அதனுடன் தேன் கலந்து தினசரி இரண்டு வேளைகள் சாப்பிட்டுவந்தால் வறட்டு இரும்பல் மற்றும் நெஞ்சு சளி எல்லாம் சரியாகிவிடும்.
  • சித்தரத்தையை நன்கு தட்டி, 350 மிலி சுடு நீரில் 3 மணி நேரம் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி 30 மிலி – 40 மிலி தேன் சேர்த்து கலந்து சித்தரத்தை கஷாயம் செய்து குடித்துவந்தால் நுரையீரல் மற்றும் தொண்டை நோயெல்லாம் பூரண குணமாகும்.
  • ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு மற்றும் வயதானவர்களுக்கு அடிக்கடி கால் வலி, மூட்டு வலி ஏற்பட்டு பெரும் தொந்தரவு ஏற்படும், இவற்றை குணப்படுத்த சித்தரத்தை ஒரு சிறந்த பொருளாக விளங்குகிறது.
  • உடலில் நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து, உடலினை நன்கு வலுப்படுத்தவும் மற்றும் சக்தியை கொடுக்கவும் மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்யவும் பயன்படுகிறது.


சித்தரத்தை வளர்ப்பு செய்வது எப்படி மற்றும் அதன் ஈடு இணையற்ற மருத்துவ பயன்கள் என்ன என்பதை பார்த்தோம். நீங்களும் அந்த முறையில் வளர்த்து அதன் பலன்கள் எல்லாம் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.

Comments are closed.

Pin It