சரக்கொன்றை மரம் நம் தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் காணப்படுகிறது. சரக்கொன்றை பூவைப் சிவனின் பூஜைக்கு ஏற்றதாக கருதுகின்றனர், பழம்பெரும் இலக்கியங்கள் சிவபெருமானைக் கொன்றை மலரை முடியில் சூடியவராக வர்ணிக்கிறது. சிவபெருமான் சூடிய மலர் என்பதால் தான் இன்றளவும் சிவபெருமான் ஆலயங்களில் சரக்கொன்றை மரம் வளர்ப்பு செய்யப்படுகிறது.
தமிழர்களின் பாரம்பரியம் தமிழ் புத்தாண்டான சித்திரை மாதத்தை வரவேற்கும் விதமாக, பொன்னிறமனா சரக்கொன்றை பூக்களை சரம் சரமாக பூத்துக் குலுங்குவதாக கருதுகிறார்கள். மேலும், கேரளாவில் சித்திரை விசு அன்று நடைபெறும் பூஜையில் சரக்கொன்றை பூக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனவேதான் இந்த பூவுக்கு சுவர்ண புஷ்பம் மற்றும் சித்திரைப் பூ எனும் சிறப்பு பெயர்களும் உண்டு.
வெப்ப மண்டலப்பகுதி மற்றும் குறைந்த வெப்ப மண்டலப்பகுதிகளில் நன்றாக வளரக்கூடியது இந்த சரக்கொன்றை. மேலும் கோடை வறட்சியையும் கூட தாங்கக் கூடியது. சரக்கொன்றை மரம் விதையிலிருந்து வளர்ப்பது எப்படி, சரக்கொன்றை மரம் பொதுப்பண்புகள் மற்றும் சரக்கொன்றை மருத்துவ பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டிஉங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்! |
விதை தயார் செய்தல்
சரக்கொன்றை மரத்திலிருந்து காய்ந்த காய்களை எடுத்துக்கொள்ளவும். காய்கள் உறுதியாக இருக்கும், அதை உடைத்து அதனுள்ள இருக்கும் விதைகளை சேகரித்துக்கொள்ளவும், விதைகளும் மிக உறுதியாக இருக்கும். நீரை கொதிக்கவைத்து, சேகரித்த விதைகளை அதில் போட்டு ஒரு இரவு முழுவதும் ஊறவிக்கவேண்டும். சூடான நீரில் விதைகளை போட்டால் விதைகள் வீணாகிவிடும் என்று பயப்படவேண்டாம், விதையின் தோலை இலகுவாக்கவே இந்த செயல் சரக்கொன்றை மரம் வளர்ப்பு சிறக்க உதவும்.
அப்படி ஊற வைக்கும் பொழுது அடுத்த நாள் ஒரு சில விதைகள் சற்று பெரிதாகி இருக்கும். அந்த விதைகளே நடவுக்கு ஏற்ற விதைகள் ஆகும். ஊறவைத்தும் பெரிதாகாமல் இருக்கும் விதைகளை தவிர்த்து விடவும், அது முளைத்து வர வாய்ப்புகள் குறைவு.
மண்கலவை மற்றும் நடவுசெய்தல்
செம்மண் மற்றும் மக்கிய தொழு உரம் இரண்டையும் சமபங்கு கலந்து மண்கலவை தயார்செய்து கொள்ளவும். தழை, இலை சருகுகளை கூட பயன்படுத்தலாம். நேர்த்தியான, தேர்ந்தெடுத்த விதைகளை மண்கலவையில் 2 இன்ச் ஆழம் தோண்டி அதில் போட்டு மூடிவிடவும். பிறகு தினமும் பூவாளிக்கொண்டு நீர் தெளித்து வரவும், 15 நாட்களில் முளைத்து வர தொடங்கிவிடும்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! 10 கிலோ மாட்டு எரு தொழுஉரம் மூட்டைஉங்கள் தோட்டத்திலுள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கைமுறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்! |
சரக்கொன்றை மரம் பொதுப்பண்புகள்
- சரக்கொன்றை மரம் வளர்ப்பு சிறப்பாக அமையும் பட்சத்தில் 40 அடி வரை உயரம் வளரக்கூடியது.
- மிக அகன்ற கிளைகளை கொண்ட இலையுதிர் மரமாகும் இந்த சரக்கொன்றை மரம்.
- சரக்கொன்றை மரம் இளமையில் பச்சை நிறத்தை உடையதாகவும், முதிர்ந்தப் பின்பு சாம்பல் நிறமாகவும் மாறுதல் அடைகிறது.
- இதன் பூக்கள் வெளிர் மஞ்சள் நிறத்தைக்கொண்டிருக்கும். முதிர்ந்த சரக்கொன்றை காய்களானது 30-60 செ.மீ நீளமும் 40-100 விதைகளை உடையதாக இருக்கும்.
- அதிக வெப்ப நிலையை தாங்கி நன்கு வளரக்கூடியது.
சரக்கொன்றை பயன்கள்
- சரக்கொன்றை மலரின் மகிமைகள் பல உண்டு, சரக்கொன்றை மரம்தனில் முருங்கைக்காய் போல இரண்டு அடி நீளத்துக்குக் காய்கள் காய்க்கும். அதனுள்ளே பசையுள்ள சதைப்பற்று புளியைப்போலவே இருக்கும், இதை சரக்கொன்றை புளி என்று கூறுவார்கள். இந்த சரக்கொன்றை புளியை சாதாரணப் புளியுடன் சேர்த்து உண்டு வர பித்தக்கோளாறுகள் நீங்கும்.
- சரகொன்றைப்பூவை கொதிக்கும் நீரில் வேக வைத்து, பின்பு அதனுடைய சாறைப்பிழிந்து எடுத்து அதனுடன் நாட்டுச் சர்க்கரை கலந்து கால் லிட்டர் அளவு குடித்து வர வயிற்றில் இருக்கும் பூச்சிகள் எல்லாம் வெளியே வந்துவிடும்.
- சரகொன்றைப்பூவை நன்கு மையாக அரைத்து பத்து கிராம் எடுத்துப் பசுவெண்ணெயோடு குழைத்து உண்டு வந்தால் வெள்ளைப்படுதல் மற்றும் வெட்டை நோய்கள் போன்ற மேக நோய்கள் சரியாகும்.
- சரக்கொன்றை புளியை நெல்லிக்கனி அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு திரிபலா சூரணம் கலந்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் வந்தால் வயிறு சுத்தமாகும்.
- காதுவலியால் அவதிப்படுகிறவர்கள், சரக்கொன்றை மலரை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி 2 சொட்டுகள் காதின் உள்ளே விட்டுவர காது வலி குணமாகும்.
வாழ்வை வளப்படுத்தும் தெய்வ விருட்சங்களில் ஒன்று இந்த சரக்கொன்றை மரம் வளர்ப்பு செய்வது எப்படி என்பதை பார்த்தோம், நீங்களும் அதே முறையில் வளர்த்து அதன் மலர் போல உங்கள் வாழ்வும் செழித்தோங்க வாழ்த்துகிறோம்.
Comments are closed.