கொத்தவரங்காய் செடியானது ஒரு சிறு செடிவகை காய்கறிகளில் ஒன்றாகும். இதனுடைய காய்களானது செடியில் கொத்துக் கொத்தாக காய்க்கின்ற இயல்பை கொண்டது. கொத்தவரங்காய், ஆப்பிரிக்க காட்டு ரக செடியிலிருந்து தனித்து விளங்கும் ஒரு வகை தாவரம் ஆகும். உண்ணக்கூடியதாக இனம் கண்டு சமையலுக்கு பயன்படுத்திய நாடுகள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகும். குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் தான் அதிகளவில் கொத்தவரங்காய் செடி வளர்ப்பு செய்யப்படுகிறது.
கொத்தவரங்காய் சமையலுக்காகப் பயன்படுவதை விட , அதன் விதையிலிருந்து பிரித்து தயாரிக்கப்படும் கார் பிசின் ஆனது உணவுத்தயாரிப்பு தொழிலில் மிக முக்கிய சேர்க்கைப் பொருளாக மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் ஆலைகளில் பயன்படுத்தப்படுகிறது. அதனால் தான் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் முக்கியமான பணப்பயிராக கொத்தவரங்காய் விளங்குகிறது.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்! |
கொத்தவரங்காய் செடி வளர்ப்பு, மாடியில் கொத்தவரங்காய் வளர்ப்பது எப்படி, கொத்தவரங்காய் சாகுபடி செய்வது எப்படி மற்றும் பிரமிக்க வைக்கும் கொத்தவரங்காய் மருத்துவ பயன்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
விதை தேர்ந்தெடுத்தல்
நன்கு முற்றிய காய்களில் இருந்து எடுத்த விதைகள் அல்லது கடைகளில் விற்கும் விதைகளை வாங்கிக்கொள்ளவும். தேர்ந்தெடுக்கும் விதையானது நேர்த்தியானதாக இருத்தல் அவசியம், அந்த விதைகளை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊறவைக்கவேண்டும். அடுத்த நாள் விதைகள் எல்லாம் ஈரப்பதத்தை உறிஞ்சி சற்று பெரிதாகி இருக்கும்.
மண்கலவை தயார் செய்தல்
நடவு செய்வதற்கு ஏற்ற மண்கலவையை தயார் செய்து கொள்ளவேண்டும். 40 சதவிகிதம் செம்மண், 40 சதவிகிதம் மணல், 20 சதவிகிதம் மக்கிய தொழு உரம் ஆகிய இந்த மூன்றையும் நன்கு கலந்து தயாரிக்க வேண்டும். மண்கலவை தயார் செய்ததும் உடனே விதைப்பு செய்யக்கூடாது. ஏழு முதல் பத்து நாட்களில் மண்கலவை நன்கு காய்ந்து, நுண்ணுயிரிகள் எல்லாம் வேலை செய்ய தொடங்கிவிடும், அதன் பிறகு தான் கொத்தவராங்காயை விதைப்பு செய்யலாம்.
நடவு மற்றும் வளர்ச்சி
கொத்தவரங்காய் விதையின் அளவைவிட இரண்டு மடங்கு ஆழத்தில் விதைகளை போட்டு பிறகு மண்ணால் மூடி அதன் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும். விதைத்த மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் முளைத்து வர தொடங்கிவிடும். 40 நாட்களுக்கு பிறகு மொட்டுகள் வைக்க ஆரம்பிக்கும், 60 நாட்களில் கொத்தவரங்காய் சாகுபடி செய்யலாம்.
உரமேலாண்மை
வேப்ப இலைகளை பறித்து நன்கு காய வைத்து, அதை தூள் செய்து வைத்து கொள்ள வேண்டும். அந்த தூளை கொத்தவரங்கா செடியின் வேர் பகுதியில் படும்படி போட்டு சிறிது கொத்திவிட வேண்டும், இது கொத்தவரங்கா செடிக்கு அடி உரமாக செயல்படும். செடிகளை பாதுகாக்க கூடிய இயற்கை பூச்சி விரட்டியான வேப்ப எண்ணை கரைசலை மாதத்திற்கு ஒரு முறை தெளித்துவிட வேண்டும். இவ்வாறு கொத்தவரங்காய் பராமரிப்பு செய்ய வேண்டும்
![]() |
இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய்நாற்கழிவு கட்டிகள்உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்கைநார்கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்! |
கொத்தவரங்காய் பயன்கள்
- கொத்தவரங்காவின் கலோரி அளவு குறைவாக இருப்பினும், உடலுக்கு அத்தியாவசியமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருக்கும் உணவாக கொத்தவரங்கா இருக்கிறது. எனவே உடல் எடையை விரைவில் குறைக்க விரும்புபவர்கள் இந்த காயை உணவில் உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால் நல்ல பலனை கண்கூட பார்க்கலாம்.
- நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளின் சிறப்பான செயல்பாடுகளுக்கும் மேலும் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கும் உடலின் ரத்த ஓட்டமானது முறையாக இருப்பது அவசியம். ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களின் குறைபாட்டாலே தன் இரத்தச் சோகை ஏற்படுகின்றது. இரத்தச் சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கொத்தவரங்காயை சாப்பிட்டுவந்தால் ரத்த சோகை சரியாகி உடலானது மீதும் ஆரோக்கிய நிலைக்கு திரும்பும்.
- அன்றாடம் உண்ணும் உணவில் மற்ற சத்துக்களோடு நார்ச்சத்தும் இருப்பது மிகவும் முக்கியமானதாகும். நார்ச்சத்து நமது உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுகின்றது. மேலும் கொத்தவரங்காயில் மிகுந்த புரதச்சத்துகள் மற்றும் தாதுக்களை கொண்டுள்ளதால் நமது உடலை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகின்றது.
- தினசரி வெளியில் செல்லும் போது நாம் பல்வகையான நோய் கிருமிகளால் தாக்குதல்களை எதிர்கொள்ள நேர்கிறது. இத்தகைய நோய் தாக்குதலில் இருந்து காப்பது நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியாகும். கொத்தவரங்காயை அன்றாடம் உணவில் அதிகம் சேர்த்து வந்தோமேயானால், அது நமது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கி நோய்களில் இருந்து நம்மை காக்கும்.
- பற்கள் மற்றும் எலும்புகளின் வலுவிற்கு கால்சியம் அவசியமானதாகும் . கொத்தவரங்காயில் கால்சியம் சக்தி அதிகம் உள்ளதால், வாரத்திற்கு மூன்று முறை உணவில் கொத்தவரங்காயை சேர்த்து சாப்பிட்டு வந்தால், பற்கள் மற்றும் எலும்புகள் நன்கு வலுப்பெறும்.
- இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையால் சிலருக்கு எதற்கெடுத்தாலும் பதற்றம், மனஅழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளால் அதிகம் அவதிப்படுவார்கள், அவர்களெல்லாம் கொத்தவரங்காயை சாப்பிட்டுவந்தால், நரம்பு மண்டலம் வலுப்பெற்று உடல் நலம் மற்றும் மன நலம் சிறக்கும்.
இக்கட்டுரையில் கொத்தவரங்காய் செடி வளர்ப்பு மற்றும் கொத்தவரங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் அனைத்தையும் பார்த்தோம். இயற்கையின் அருட்கொடையான இந்த கொத்தவரங்காவை வீடுதோறும் வளர்த்து அதன் முழு பயன்களையும் பெற வாழ்த்துகிறோம்.
Comments are closed.