அழிவின் விளிம்பு நிலையில் இருக்கும் தம்பட்டை அவரை அல்லது கொடி தம்பட்டை அவரை வளர்ப்பு செய்வது வெகுவாக மக்களிடையே குறைந்து வருகிறது. நம் முன்னோர்களை மிக திடகாத்திரமாக வைத்திருக்க உதவியதில் இந்த கொடி தம்பட்டை அவரை காய்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இதில் செடி தம்பட்டை மற்றும் கொடி தம்பட்டை என இரண்டு ரகங்கள் உள்ளன. இந்த செடிகளில் பெரிதாக பூச்சி தாக்குதல்கள் இருக்காது. இது வாள் அவரை என்றும் அழைக்கப்படுகிறது.
கொடி தம்பட்டை
தற்காலத்தில் வீட்டுத்தோட்ட மற்றும் மாடித்தோட்ட ஆர்வலர்களால் அழிவிலிருந்து மீண்டு வரும் அரிய காய்கறிவகைகளில் இந்த கொடி தம்பட்டையும் இருக்கிறது. கொடி தம்பட்டை அவரை வளர்ப்பு செய்வது எப்படி, மாடித்தோட்டத்தில் கொடி தம்பட்டை அவரை வளர்ப்பு, தம்பட்டை அவரை அறுவடை மற்றும் தம்பட்டை அவரை பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

மண்கலவை தயார் செய்தல்

தம்பட்டை அவரை ஒரு அடி நீளம் வரை வளரக்கூடிய காயாகும், எனவே அதன் தொடக்க மண்கலவையை சரியாக தேர்வு செய்வது மிகவும் அவசியமாகும். செம்மண் 40 சதவிகிதம், மக்கிய தொழு உரம் 40 சதவிகிதம், மணல் 20 சதவிகிதம் ஆகிய மூன்றையும் நன்கு கலந்து மண்கலவையை தயார் செய்து கொள்ளவேண்டும்.

5kg cocopeat icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய்நாற்கழிவு கட்டிகள்

உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்கைநார்கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

விதை விதைத்தல் மற்றும் வளர்ச்சி

தம்பட்டை அவரை விதை
விதைகள் விதைத்த நாளிலிருந்து குறைந்தபட்சம் 7 முதல் 15 நாட்களில் தம்பட்டை அவரை முளைக்க தொடங்கும். தம்பட்டை அவரை விதை அளவில் பெரியதாக இருப்பதினால் முளைப்பதற்கு சிறிது நாட்கள் எடுத்துக்கொள்கின்றன. கொடிகள் நன்கு வளர்ந்து சுமார் 60 நாட்களில் பூக்கள் பூக்கத்தொடங்கும். இந்த வளர்ச்சி அந்தந்த மண்கலவையை பொறுத்து மாறுபட வாய்ப்புள்ளது. இதன் பூக்கள் வெண்மை நிறம் கலந்த ஊதா நிறத்தில் இருக்கக்கூடும்.

தம்பட்டை அவரை அறுவடை

அவரை
பூக்கள் பூக்க தொடங்கிய சில நாட்களில் பிஞ்சுகள் பிடிக்கத்தொடங்கும். 75 நாளில் இளம்பிஞ்சுகள் ஓரளவிற்கு வளர்ந்திருக்கும் அப்போதே அதை பறித்து சமையலுக்கு பயன்படுத்தலாம். பிறகு 85 நாட்கள் முதல் 90 நாட்களில் கொடி தம்பட்டை அவரை அதன் முழு வளர்ச்சியை அடைத்திருக்கும், இப்போது கொடி தம்பட்டையை அறுவடை செய்து கொள்ளலாம். தம்பட்டை அவரை காய்கள் ஒரு அடியில் வாள் போன்ற தோற்றத்தில் வளர்ந்திருக்கும் எனவே தான் இது வாள் அவரை என பெயர் பெற்றது.

தம்பட்டை அவரை பயன்கள்

தம்பட்டை அவரை

  • கொடி தம்பட்டை அவரையில் நம் உடலுக்கு தேவையான Folate எனும் விட்டமின் சத்து 44 % இருக்கிறது. இந்த முக்கிய சத்து தான் நம்முடைய மரபணுக்களின் உற்பத்திக்கும் மற்றும் செல்களின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.
  • சிலருக்கு நாள்பட்ட சரும தொந்தரவு இருக்கும், அவர்களெல்லாம் இந்த கொடி தம்பட்டையை அடிக்கடி உண்டுவந்தால் சருமத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குறைத்து, இனி ஏற்படாமல் பாதுகாக்கும்.
  • கொடி தம்பட்டை அவரை காயில் நார்சத்து மிகுதியாக இருப்பதால் செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது, இதனால் மலச்சிக்கல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் பூரண குணமாகிறது.
  • 5 litter sprayer icon

    இப்போதே வாங்குங்கள்!! 5 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

    உங்கள் செடிகளின்மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்களை தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

     Buy Now

  • இரவில் உறக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் அதிகம், உறங்குவதற்கு மருந்துகள் ஏதும் பயன்படுத்தாமல், உறங்க செல்லும் முன் உணவுடன் இந்த தம்பட்டையை உண்டால் ஆரோக்கியமான உறக்கம் பெறலாம்.
  • வெளிநாடுகளில் ஆரோக்கியபானங்கள், தேநீர் தயாரிப்பிலும், மேலும் பற்பசை, சோப்பு தயாரிப்பிலும் கூட கொடி தம்பட்டை அவரையை பயன்படுத்துகின்றனர்.


ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இந்த கொடி தம்பட்டை அவரை வளர்ப்பு செய்வது எப்படி என்று பார்த்தோம், நீங்களும் மேற்கண்ட முறையில் தம்பட்டை அவரை வளர்த்து அதன் முழு பயன்களையும் பெற வாழ்த்துகிறோம்.

Comments are closed.

Pin It