கேரட் செழிப்பான ஆரஞ்சு நிறத்தில் இருக்கக்கூடியது, நீளமான கூம்பு வடிவத்திலும், கிழங்கை போல வேரில் திரண்டு வளரக்கூடிய ஒரு வேர்க்காய் வகையை சேர்ந்ததாகும். முதன் முதலில் ஆப்கானிஸ்த்தான் பகுதியில் தான் கேரட் செடி வளர்ப்பு செய்ய பயிரிடப்பட்டது, பின்பு நடுத்தரைக்கடல் பகுதிகளில் பயிரிடப்பட்டது. குளிர் பிரதேசபகுதிகளில் வெப்பநிலை 15 டிகிரி முதல் 20 டிகிரி செல்சியஸ் வரை இருக்கின்ற பொழுது கேரட் அடர் ஆரஞ்ச் நிறத்துடன் விளையும்.
நம் தமிழகத்தில் கேரட் செடி வளர்ப்பு செய்வதற்கு ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்கள் மிகவும் ஏற்றது என்றாலும் வீட்டிலும் அதை வளர்க்க முடியும். கேரட் செடி வளர்ப்பது எப்படி, மாடித்தோட்டத்தில் கேரட் வளர்ப்பது எப்படி, கேரட் சாகுபடி மற்றும் கேரட் பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காணலாம்.
மண்கலவை தயார் செய்தல்
வீட்டிலேயே கேரட் வளர்க்கும் முறையில் முக்கிய பங்கு வகிப்பது அதற்கான மண்கலவை தயார் செய்வது. கோகோபீட் 40 சதவிகிதம், செம்மண் 30 சதவிகிதம் மற்றும் மக்கிய தொழு உரம் 30 சதவிகிதம் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து மண்கலவை தயார் செய்துகொள்ளவும். இந்த விகிதத்தில் மண்கலவை இருந்தால் கேரட் செடி வளர்ப்பு சிறக்கும்.
![]() |
CHRYZTAL Stainless Steel Heavy Duty Gardening Tool SetGarden Tool Set, Stainless Steel Heavy Duty Gardening Tool Set, with Non-Slip Rubber Grip, Storage Tote Bag, Outdoor Hand Tools, Ideal Garden Tool Kit Gifts for Women and Men |
கேரட் விதை விதைத்தல்
கேரட் விதைகள் ஜீரகத்தை போன்ற வடிவத்தில் இருக்கும், தயார் செய்து வைத்துள்ள மண்கலவையை நெகிழிப்பை அல்லது மண்தொட்டியில் போட்டு நிரப்பிக்கொள்ளவும். சிறிது பள்ளம் தோண்டி அதில் கேரட் விதைகளை போட்டு மூடவும், சிறிய விதை என்பதால் நீர் கொஞ்சம் அதிகமானால் கூட விதை மேலே வந்து விடும் எனவே மிகவும் கவனமாக பூவாளி கொண்டு நீர் தெளிக்கவும்.
கேரட் செடி பராமரிப்பு முறை
கேரட் வளர தொடங்கியதுமே வேர்ப்பகுதியில் வெளியே தெரிய ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட சமயத்தில் அதன் வேரை மணலை கொட்டி மூடவேண்டும், இல்லையெனில் அதன் வேர்கள் வெளியே வந்து வளர்ச்சி பாதிக்கும் மேலும் சூரிய ஒளி நேரடியாக கேரட் மீது பட்டால் அதன் மேற்பகுதி பச்சை நிறமாக மாற வாய்ப்பு உள்ளது.
கேரட் சாகுபடி
கேரட் விதைத்த நாளில் இருந்து முறையாக கவனித்து வர வேண்டும், அதிகம் நீரை தேங்க விடாமல், பூச்சி தாக்குதல் ஏதும் ஏற்படாமல் நன்கு பராமரித்து வந்தால் 60 முதல் 70 நாளில் ஆரோக்கியமான கேரட்டை அறுவடை செய்யலாம். அறுவடை செய்யும் தருணத்தில் மண் ஈரமாக இருந்தால் கேரட்டை எளிதாக பிடிங்கிவிடலாம்.
கேரட் பயன்கள்
- கேரட்டில் உள்ள இனிப்புச்சுவை சர்க்கரை நோய் உடையவர்களுக்கு மிகவும் நல்லது. சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க இது உதவும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து நன்மை தரக்கூடிய கிருமிகளை உற்பத்தி செய்கிறது.
- இதயப்பிரச்சனைகள் ஏற்பட மிக முக்கிய காரணம் இரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பாகும். கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு குறையும்.
- கண்பார்வை குறைபாட்டால் பலரும் பாதிக்க பட்டு அவதிப்படுவார்கள், அவர்கள் எல்லாம் தினசரி கேரட்டை உண்டு வந்தால் கேரட்டில் இருக்கும் வைட்டமின் A கண்களின் பார்வையை சீராக்கி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
- உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி மேனி அழகைப் பராமரிக்கவும் கேரட் உதவுகிறது, தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் மேனியின் மினுமினுப்பு கூடும்.
- பால் பிடிக்காத சிறு குழந்தைகளுக்கு கேரட் மில்க் ஷேக் செய்து பருக கொடுக்கலாம். இதில் கால்சியம் அதிகளவு இருப்பதால் எளிதில் ஜீரணமாகும்.
![]() |
Garden Pressure Pump SprayerITISLL Manual Garden Sprayer Hand Lawn Pressure Pump Sprayer Safety Valve Adjustable Brass Nozzle 0.5 Gal 2L |
மாடித்தோட்டத்தில் கேரட் விதைப்பு முதல் அறுவடை வரை எப்படி செய்வதென்று பார்த்தோம். நீங்களும் மேற்கண்ட முறையில் கேரட்டை விளைத்து உங்கள் ஆரோக்கியத்தை பெருக்க வாழ்த்துகிறோம்.
Comments are closed.