குண்டுமல்லி செடி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு என்பது மிகவும் எளிதாகும். பழங்காலத்தில் இருந்தே பெண்கள் பூக்கள் சூடுவதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள். அதிலும் குண்டுமல்லி பூ என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். எல்லோருக்கும் பூக்களை சூடிக்கொள்ள மட்டும் இல்லாமல் பூச்செடி வளர்க்கவும் பிடிக்கும்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now


குண்டுமல்லி, ஜாதிமல்லி, கரும் முல்லை, ஊசி மல்லி, நாக மல்லி என இருபத்தியாறு வகைகள் உண்டு. குண்டுமல்லி செடி வளர்க்க நினைப்பவர்கள் எந்த மாதிரியான மாதத்தில் குண்டுமல்லி செடி நடலாம் என்று தெரியாமல் இருப்பார்கள், ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை நடவுக்கு ஏற்றதாகும்.

குண்டுமல்லி பூக்கள்
பெரும்பாலும் அனைவரும் ரோஜா செடி, மல்லிகைபூச்செடி போன்றவற்றை வளர்க்க விரும்புவார்கள். மல்லிகை பூ செடி வளர்ப்பது எப்படி, மல்லிகை பூ செடி பதியம் போடுவது எப்படி, குண்டுமல்லி செடியில் அதிகமான பூ வர என்ன செய்யலாம், மல்லிகை செடி உற்பத்தி போன்றவற்றைப்பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

குண்டுமல்லி செடி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு – உற்பத்தி

குண்டுமல்லி பூ
குண்டுமல்லி செடி வளர்ப்பு பொறுத்தவரை பராமரிப்பு மிகவும் அவசியம். மல்லிகைக்கு மட்டுமல்லாமல் அனைத்து பூக்களுக்குமே பராமரிப்பு முக்கியம். மல்லி செடியை பொறுத்தவரை இரண்டு வகை உண்டு, ஒன்று கொடி வகை, மற்றொன்று செடி வகை. கொடி வகை செடிகள் வீட்டில் வளர்க்க தகுந்ததாகும். தோட்டத்தில் பயிர் செய்ய செடி வகை சிறந்தது.

பயிர் நட வேண்டிய நிலத்தை 2 அல்லது 3 முறையோ நன்கு உழ வேண்டும். நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் நிலங்கள் பயிர் நட ஏற்றவை. பூக்கள் பூப்பதற்கு இயற்கை தொழு உரங்கள், மண்புழு உரம், காய்கறி கழிவுகள், புளித்த மோர் கரைசல். தேமோர் கரைசல், மீன் அமினோ அமிலம், எருக்கம் இலை கரைசல், கடலைப்பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு கரைசல் போன்றவை சிறந்தது. மல்லிகை செடியை கவாத்து செய்வது அவசியம்.

மல்லிகை செடியை கண்டிப்பாக வெயில் படும்படியான இடத்தில வைக்க வேண்டும். ஒரு எக்டருக்கு 6400 பதியங்கள் தேவைப்படும். செடிகள் மார்ச் முதல் நவம்பர் மாதங்களில் பூக்க தொடங்கும். என்றாலும் இரண்டாம் ஆண்டில் இருந்து சராசரியான விளைச்சல் இருக்கும். நன்கு வளர்ந்த மொட்டுக்களை அதிகாலையில் பறித்து விட வேண்டும். எக்டருக்கு 875௦ கிலோ மொட்டுக்கள் வரை கிடைக்கும்.

மல்லிகை பூ செடி பதியம்

குண்டுமல்லி செடி பதியம்
மல்லிகை பூ செடி பதியம் போடுவது மிகவும் எளிதாகும். மல்லிகை செடி பதியம் போட அக்டோபர், நவம்பர் மாதங்கள் சிறந்தவையாகும். மல்லிகை பூ செடி பதியம் போடும்போது தடிமனான கிளையாக இருப்பது நல்லது. கிளைகளை மண்ணில் ஊன்றும்போது நேராக இல்லாமல் 45 டிகிரி சாய்வாக வைக்க வேண்டும். பதியம் போடும்போது பட்டை தூள், கற்றாழை ஜெல் போன்றவற்றில் குச்சிகளை நனைத்து ஊன்றலாம்.

மல்லிகை செடி பதியம் போடும்போது கண்டிப்பாக தண்டுகளின் மேல்பாகம் வெயில் படாதவாறு இருக்க வேண்டும். பதியம் போட்ட பிறகு செடியை நிழலில் வைக்க வேண்டும். பதியம் போட்டு நன்றாக துளிர் விட்ட பிறகு வேறு இடத்திற்கு மாற்றி வைக்க வேண்டும்.

எளிமையான முறையில் வீட்டில் குண்டுமல்லி பூச்செடி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு

குண்டுமல்லி செடி வளர்ப்பு

பெண்கள் எப்போதும் பூச்செடிகள் வளர்க்க விரும்புவார்கள். அதிலும் பூச்செடி வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அவர்கள் முதலில் யோசிப்பது மல்லிகை செடி வளர்ப்பது எப்படி என்பதாகத்தான் இருக்கும். வீட்டில் பெண்களே எளிய முறையில் மல்லி செடி வளர்ப்பு தொடங்கலாம்.

வீட்டில் மல்லி செடி வளர்க்க 50 லிட்டர் கேனில் வைத்து வளர்க்கலாம். மல்லி செடி வளர்க்க செம்மண் சிறந்தது. செடி நன்றாக வெயில் படும்படியான இடத்தில் இருக்க வேண்டும். மற்றபடி பராமரிப்பு முறைகள் மாடித்தோட்டமோ, சாகுபடி செய்யும் தோட்டமோ எல்லாவற்றுக்கும் ஒன்றே.

10kg Cow Dung Manure icon

இப்போதே வாங்குங்கள்!! 10 கிலோ மாட்டு எரு தொழு உரம் மூட்டை

உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கை முறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

வெயில் காலங்களில் காலை, மாலை என இரு வேளையும் தண்ணீர் விட வேண்டும். குளிர் காலம் மற்றும் மழைக்காலங்களில் மண்ணின் ஈரத்தன்மையைப் பொறுத்து தண்ணீர் விட வேண்டும்.

குண்டுமல்லி செடியை கட்டிங் செய்யும் முறை

குண்டுமல்லி செடி cutting

குண்டுமல்லி செடியைப் பூக்கள் நன்றாக பூப்பதற்க்காக கட்டிங்(கவாத்து) செய்ய வேண்டும். செடியை சுற்றி அனைத்து பக்கங்களிலும் ஒரே மாதிரியாக வெட்ட வேண்டும். மாதத்திற்கு ஒரு முறை இவ்வாறு வெட்டலாம். செடிகளை வெட்டிவிட்டு 25 நாட்களில் பூக்கள் பூக்கத் தொடங்கும். அதன் பின்னர் 8 நாட்கள் வரை பூக்கள் பூக்கும். பிறகு மீண்டும் செடிகளை வெட்ட வேண்டும் . செடிகளை வெட்டி விட்ட பிறகு தண்ணீர் அதிகம் பாய்ச்சக்கூடாது. குறைவான அளவில் தண்ணீர் பாய்ச்சுவது செடிகளுக்கு நல்லது.

குண்டுமல்லியின் பயன்கள்

குண்டுமல்லி benefits

  • குண்டுமல்லி பூக்கள் அழகுக்காக மட்டுமல்லாமல் மருத்துவத்துக்காகவும், பூஜைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
  • மல்லிகைப்பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வர வயிற்றில் உள்ள கொக்கி புழுக்கள், நாடாப்புழுக்கள் போன்றவை அழிந்து விடும்.
  • மல்லிகைப்பூவை வெயிலில் காயவைத்து பொடிசெய்து தண்ணீரில் கலந்து குடுத்து வர சிறுநீரக கற்கள் கரைந்து விடும்.
  • அடிப்பட்ட வீக்கம் அல்லது சுளுக்கு பிடித்த வீக்கம் போன்றவைக்கு
    மல்லிகைப்பூக்களை அரைத்து பூச வீக்கம் சரியாகும்.
  • பெண்களுக்கு உடல்சூடு, மனஅழுத்தம் குறைய தலையில் மல்லிகைப்பூக்களை சூடிக்கொண்டால் போதுமானது.

  • பயன்கள் பல இருக்கும் இந்த குண்டுமல்லி செடி வளர்த்து அதன் மலர் போல உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பூத்து குலுங்க வாழ்த்துகிறோம்.

    Comments are closed.

    Pin It