சுமார் 4000 ஆண்டுக்கு முன்னதாக இந்த காராமணி ஆப்பிரிக்காவில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கிமு 200 முதல் கிமு 300 ஆண்டுகளுக்கிடையில் இந்தியாவிலும் இது அறிமுகம் செய்யப்பட்டதாக கருதப்படுகிறது, தற்போது தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் அதிகளவு காராமணி செடி வளர்ப்பு செய்யப்படுகிறது.
இந்த காராமணி தட்டைப்பயறு என்றும் அழைக்கப்படுகிறது. இது வறண்ட நிலங்களில் கூட செழித்து வளரும் தன்மை கொண்டது, எனவே இது ஏழை மக்களின் பசியைப் போக்குவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது, மேலும் அதிகப்படியான ஊட்டச்சத்துக்களை வாரி வழங்குவதால் ஏழைகளின் அமிர்தம் காராமணி என்றும் அழைக்கப்படுகிறது.
காராமணி செடி வளர்ப்பது எப்படி, மாடி தோட்டத்தில் காராமணி செடி வளர்க்கும் முறை, விதையிலிருந்து காராமணி செடி வளர்ப்பது எப்படி, காராமணி வகைகள் மற்றும் காராமணி பயன்கள் ஆகியவற்றை பற்றி இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.
காராமணியின் அமைப்பு மற்றும் வளரும்தன்மை
காராமணி செடியானது சுமார் மூன்று அடி வரை உயரம் வளரக்கூடியது. இந்த காராமணி செடி வறண்ட சூழலிலும் மற்றும் களர் மண்ணிலும் செழித்து வளர்கின்ற இயல்பினை கொண்டது. இத்தாவரத்தின் வேர்முடிச்சுதனில் வாழ்கின்ற பாக்டீரியாக்கள் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தி மண்ணை நன்கு வளமாக்குகிறது.
காராமணி செடியின் பூக்கள் மணி வடிவத்திலும், வெள்ளை, இளம் மஞ்சள், இளம் சிவப்பு, ஊதா மற்றும் கருஊதா போன்ற நிறங்களில் காணப்படுகிறது, இந்த பூக்களிலிருந்து உருளைவடிவக் காய்கள் நீண்டு தோன்றுகின்றன. ஒவ்வொரு காயும் 6 முதல் 15 வரை விதைகளை தன்னுள் கொண்டிருக்கும்.
காராமணி விதையானது சிறிது வளைந்து சிறுநீரக வடிவத்தில் 6-12 மிமீ நீளம் கொண்டதாகவும், கருப்பு, பச்சை, பழுப்பு, நிறங்களிலும் காணப்படுகிறது. இந்த விதைகள் 5 ஆண்டுகள் வரையிலும் முளைக்கும் திறனை கொண்டிருக்கும். காராமணியின் காய்கள் மற்றும் விதைகள் என முழுதாவரமும் உணவாக உட்கொள்ளப்படுகின்றன.
காராமணி விதைகள் நடவு செய்தல்
விதையை நடவு செய்வதற்கு முன்பு நேர்த்தியான மண்கலவையை தயார் செய்து கொள்ள வேண்டும், நல்ல வடிகால் வசதியுள்ள மண் 40 சதவிகிதம், செறிவூட்டப்பட்ட மண்புழு உரம் அல்லது மக்கிய தொழு உரம் 40 சதவிகிதம், மணல் 20 சதவிகிதம் ஆகிய மூன்றையும் நன்கு கலந்து மண்தொட்டி அல்லது நெகிழிப்பையில் போட்டு நிரப்பிக்கொள்ளவும்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! 20 கிலோ மண்புழு உரம் மூட்டைஇயற்கை முறையில் உங்கள் தோட்டத்திலுள்ள செடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையை அதிகரிக்கும் மண்புழு உரம். மிக குறைந்த விலையில்! |
நெகிழிப்பையின் அளவைப்பொறுத்து காராமணி செடி விதைகளை நடவு செய்யவேண்டும். சிறிதாக தோண்டி அதில் காராமணி விதைகளை போட்டு மூடி அதன் மீது பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்கவேண்டும்.
காராமணி செடி வளர்ச்சி மற்றும் அறுவடை
விதை நடவு செய்ததிலிருந்து பராமரிப்பு அவசியம். குறிப்பாக நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். 7 நாட்களிலே விதையானது முளைத்து வருவதை கண்கூடாக பார்க்கலாம், சுமார் 40 நாட்களில் செடியானது பூக்கள் விட ஆரம்பிக்கும், 60 நாட்களுக்கு பிறகு காய்கள் கணிசமான அளவில் வளர்ந்திருக்கும் அப்போது அறுவடை செய்துகொள்ளலாம்.
பூச்சி தாக்குதல்
காராமணி செடி வளர்ப்பு தனை பெரிதும் பாதிப்பது அஸ்வினி பூச்சி தாக்குதலாகும், இந்த பூச்சிகள் செடியின் வளர்ச்சியை தடுப்பதோடு, காய்களின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. இதற்கு வேப்பெண்ணை கரைசல் நல்ல தீர்வாக அமையும். தொடர்ந்து ஒரு வாரம் வேப்பெண்ணெய் கரைசலை தெளித்து வருவதன் மூலம் அஸ்வினி பூச்சி தாக்குதல் கட்டுக்குள் வரும். இவ்வாறு செய்யும் பொழுது காராமணி வளர்ப்பு சிறக்கும்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்! |
காராமணி பயன்கள்
- சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கொடி காராமணியை உண்ணும் பொழுது பெரும் நன்மைகளை அளிக்கிறது, இது இன்சுலின் சுரப்பதை சீராக்குகிறது, மேலும் இது உடல் சோர்வுதனை நீக்கி நல்ல உறக்கத்திற்கு வழிவகை செய்கிறது.
- காராமணியில் இருக்கும் புரதம், ஆன்டிஆக்ஸிஜென்டுகள் மற்றும் வைட்டமின் சி ஆகியவை மேனி மேம்பாட்டிற்கு உதவுகிறது. இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் சருமம் விரைவில் முதிர்ச்சி அடைவதை தடைசெய்கிறது.
- இரத்த சிவப்பணுக்களின் குறைபாட்டாலே அனீமியா எனப்படும் இரத்த சோகை ஏற்படும் பாதிப்பு. காராமணியில் காணப்படும் இரும்புச் சத்தானது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து அனீமியை நீக்குகிறது.
- காராமணியானது அதிகப்படியான நார்ச்சத்தினை தன்னுள் கொண்டுள்ளது. எனவே இது செரிமானத் தன்மையை சீராக்குவதுடன் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளை சரிசெய்கிறது.
- காராமணியில் காணப்படுகின்ற வைட்டமின் பி1(தயாமின்) இதயநலத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. இந்த வைட்டமின் இதயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் காரணிகளை தடைசெய்கிறது.
குறைந்த பராமரிப்பில் அதிகப்பலன்களை தரவல்ல இந்த காராமணி செடி வளர்ப்பு செய்வது எப்படி என்று பார்த்தோம், நீங்களும் மேற்கண்ட முறையில் நாட்டு காராமணி செடி வளர்ப்பு செய்து அதன் முழு பயன்களையும் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.
Comments are closed.