கறிவேப்பிலை இன்றி நமது நாட்டில் சமையலே இல்லை என்றே சொல்லலாம், அந்த அளவிற்கு சமையலில் முக்கியத்துவம் பெற்றது இந்த கறிவேப்பில்லை. நாம் அன்றாடம் சந்தையில் வாங்குகின்ற கறிவேப்பில்லையானது அறுவடை காலம் வரையிலும் கூட மருந்து தெளிக்கப்பட்டு பின்பு தான் நம் கைகளுக்கு கிடைக்கிறது. இச்செயலுக்கு நிறைய காரணங்கள் கூறுகின்றனர், இருப்பினும் ரசாயனம் ரசாயனம் தானே. இந்த செயற்கை உரத்தின் பாதிப்பிலிருந்து நம்மையும் நமது குடும்பத்தையும் காப்பாற்றும் நோக்கில் வீட்டிலேயே கறிவேப்பிலை செடி வளர்ப்பு செய்யலாம்.
கறிவேப்பிலை செடி வளர்ப்பு
விதைகளிலிருந்து கறிவேப்பிலை செடி வளர்ப்பு செய்வது எப்படி, கறிவேப்பிலைச் செடி நடும் முறை, கறிவேப்பிலைச் செடி நன்றாக வளர என்ன செய்யவேண்டும், கறிவேப்பிலைச் செடி பராமரிப்பு மற்றும் கறிவேப்பில்லை நன்மைகள் ஆகியவற்றை பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

வளர்க்க தேவையான மண்கலவை

கறிவேப்பில்லை பொதுவாக அனைத்து வகை மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது இருப்பினும் நன்கு நீர் வடியக்கூடிய மண்ணாக இருந்தால் எந்த இடையூறும் இல்லாமல் செழித்து வளரும், அத்தகைய குணம் கொண்ட செம்மண்ணை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும், அதனுடன் செறிவூட்டப்பட்ட உரம் அதாவது மக்கிய தொழுஉரம் அல்லது மண்புழு உரம் இரண்டையும் சமபங்கு கலந்து மண்கலவை தயார் செய்யவும்.

5kg Cow Dung Manure icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாட்டு எரு தொழுஉரம் பை

உங்கள் தோட்டத்திலுள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கைமுறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

கறிவேப்பிலை விதை

கறிவேப்பிலை பழம்
கறிவேப்பிலை பூக்களிலிருந்து பழங்கள் தோன்றுகின்றன, பறவைகளால் இந்த கறிவேப்பிலை பழம் உண்ணப்பட்டு விதைகளை வெளியேற்றுவதன் மூலமாகத்தான் மற்ற இடங்களில் கறிவேப்பில்லை விருத்தி ஆகின்றது. கறிவேப்பில்லை பழத்தை பிழிந்து அதனுள் இருக்கும் விதைகளை எடுக்கவேண்டும், பிறகு இந்த விதைகளை கொண்டு கறிவேப்பில்லை செடி வளர்ப்பு செய்யலாம்.

விதை நடவு செய்தல்

கறிவேப்பிலை செடி வளர்ப்பு
தயார் நிலையில் உள்ள மண்கலவையை நெகிழி பை அல்லது தொட்டியில் போட்டு நிரப்பி, சிறிது பள்ளம் பறித்து அதனுள் கறிவேப்பில்லை விதைகளை போட்டு மூடி விடவேண்டும், விதைத்த பிறகு பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும், மிக முக்கியமாக நீர் தேங்கி நிற்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும், தேவைக்கேற்ப நீர் விட்டால் மட்டும் போதுமானது.

கருவேப்பிலை செடி வளர்ச்சி மற்றும் சாகுபடி

கறிவேப்பில்லை நன்மைகள்
கருவேப்பில்லை விதைத்ததிலிருந்து 10 நாட்களில் முளைத்து வரத்தொடங்கி விடும், 40 நாட்களில் ஓரளவுக்கு நல்லதொரு வளர்ச்சியை அடைத்திருக்கும், வீட்டுத்தேவைக்கு அவ்வப்போது பறித்து பயன்படுத்திக்கொள்ளலாம், அதிக விளைச்சலை எதிர்நோக்கும் பட்சத்தில் 2 மாதங்கள் பொறுத்து பின்பு மொத்தமாக அறுவடை செய்து கொள்ளலாம்.

பூச்சித்தாக்குதல் மற்றும் பூச்சிவிரட்டி

கறிவேப்பில்லை மிக வலுவான மணத்தை கொண்டது, இந்த மணம் பல பூச்சிகளை தானாகவே விரட்டி விடும், இருப்பினும் இதையும் மீறி சில பூச்சிகளின் தொல்லை இருக்கத்தான் செய்கிறது. ஒரு சில நேரங்களில் கருவேப்பில்லை இலைகள் சுருண்டு கொள்ளும் அல்லது பிசு பிசுவென மாறிவிடும், இதற்கு காரணம் மாவுபூச்சி, அசுவினி பூச்சி மற்றும் செதில் பூச்சி ஆகும்.

1 லிட்டர் தண்ணீரில் 1 மில்லி வேப்பெண்ணெயை சேர்த்து கலந்து தினசரி தெளித்து வந்தால் அது பூச்சி விரட்டியாக செயல்பட்டு, தாக்குதலை கட்டுப்படுத்த உதவும், இதே போல பஞ்சகாவியவை தெளித்து வந்தால் பூச்சிகளை விரட்டுவதோடு, கறிவேப்பிலை செடி வளர்ப்பு செழிக்க உதவுகிறது.

5 litter sprayer icon

இப்போதே வாங்குங்கள்!! 5 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

உங்கள் செடிகளின்மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்களை தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

 Buy Now

கறிவேப்பில்லை நன்மைகள்

கருவேப்பிலை செடி வளர்ப்பு

  • கறிவேப்பில்லை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பின் அளவை குறைக்கவும், ஜீரண சக்தியை அதிகப்படுத்தவும் பயன்படுகிறது, மேலும் இருதய நோய் இருப்பவர்களுக்கு கறிவேப்பிலையை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் இருதய ஆரோக்கியம் மேம்படும்.
  • நம் தலைமுடியின் கருமைநிறம் மாறுவதையும், முடியின் பொலிவு குறைதலையும் கறிவேப்பிலை தடுக்கிறது. எனவே தினசரி கறிவேப்பில்லை உட்கொண்டால் முடி நல்ல ஆரோக்கியத்தோடு கருமை நிறத்தோடு செழிப்பாக இருக்கும்.
  • இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், தினமும் காலையில் 1 பேரிச்சம் பழத்துடன், சிறிதளவு கறிவேப்பிலையை உண்டு வந்தால், உடலில் இருக்கும் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை பாதிப்பு நீங்கும்.
  • சளித்தேக்கத்தில் இருந்து முழு நிவாரணம் பெறுவதற்கு, ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை பொடிதனை தேன் சேர்த்து கலந்து தினசரி இரண்டு வேளை உண்டு வந்தால், நம் உடலில் தேங்கியுள்ள சளியானது முறிந்து வெளியேறிவிடும்.
  • கறிவேப்பிலையில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்பட உதவுகிறது.


மனித உடலின் உற்ற நண்பன் இந்த கறிவேப்பிலை ஆகும், இந்த அருமருந்தை தூக்கி எறிந்து உதாசீனம் செய்யவேண்டாம் என நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து பழக்குவது நம் தலையாய கடமைகளில் ஒன்றாகும். கருவேப்பிலை செடி வளர்ப்பு செய்து அதன் இல்லை போல உங்கள் ஆரோக்கியம் பசுமையாக வாழ்த்துகிறோம்.

Comments are closed.

Pin It