கடுகுக்கீரை வளர்ப்பு செய்வது மிக எளிதாகும். கடுகு கருப்பு, பழுப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது. குட்டிக் கடுகு குறையாத நன்மைகள் எனும் கூற்றிற்கு ஏற்ப பல நன்மைகளை உள்ளடக்கியது. உலகனைத்திலும் உள்ள மக்களால் இந்த கடுகு பயன்படுத்தப்படுகிறது,
இருப்பினும் இந்த கடுகு கீரையை பயன்படுத்துபவர்கள் குறைவே ஆகும். விதையிலிருந்து கடுகுக்கீரையை எவ்வாறு வளர்ப்பது, மாடித்தோட்டத்தில் கடுகுக்கீரை வளர்ப்பு செய்வது எப்படி, கடுகுக்கீரை பயன்கள் ஆகியவற்றை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
விதைக்கும் முறை
விதைப்பதற்கு நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் கடுகே போதுமானது. சிறிதளவு கடுகை ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும், அடுத்தநாள் ஊற வைத்த கடுகு சிறிதளவு பெரிதாகி காணப்படும், இச்செயல் கடுகு செடி சீக்கிரம் வளர உதவும்.
கடுகு செடிக்கென்று பிரத்தேக மண்கலவை தேவையில்லை, அனைத்து விதமான மண்ணிலும் இது வளரும் தன்மையை பெற்றது. நெகிழிப்பை அல்லது தொட்டியில் மண்ணை நிரப்பி, அதன் மீது ஊற வைத்து தயார் நிலையில் உள்ள கடுகை பரவலாக போட்டு, லேசாக மண் போட்டு மூடி சிறிதளவு நீர் தெளிக்கவேண்டும். நன்கு வெய்ல் படும் படி வைத்தால் போதும் ஓரிரு நாளில் முளைக்க தொடங்கிவிடும்.
கடுகுக்கீரை வளர்ப்பு தனில் உரமேலாண்மை
நன்கு மக்கிய மாட்டு எரு நல்ல இயற்கை உரமாகும். இந்த உரத்தை கடுகுக்கீரையின் வேர் பகுதியில் படும்படி இட்டு நீர் விட வேண்டும். இதன் மூலம் கடுகு செடியின் வளர்ச்சியானது மேம்பட்டு, கடுகுக்கீரை வளர்ப்பு சிறக்கும்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மண்புழு உரம் பைஇயற்கை முறையில் உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையை அதிகரிக்கும் மண்புழு உரம். மிக குறைந்த விலையில்! |
கடுகுக்கீரை சாகுபடி
கடுகு செடி நீளமாக வளரும் தன்மையை பெற்றது. இதன் தண்டுகள் மிக மிருதுவானதாக இருக்கும்.மேலும் கடுகுக்கீரையில் மஞ்சள் நிற பூக்கள் பூக்கும். கடுகுக்கீரையின் வயது தொன்னூறு முதல் நூறு நாட்கள் வரை ஆகும். கடுகு செடி தனில் அதன் நுனியை கிள்ளிவிட்டால் நிறைய கிளைகள் வளர வாய்ப்பு உள்ளது, இதனால் அதிக மகசூல் கிடைக்கும்.
வேர்ப்பகுதியில் நீர் தேங்கி காணப்பட்டால் கடுகு செடியின் வளர்ச்சி பாதிக்கும், எனவே நீர் தேங்காமல் நல்ல முறையில் பராமரித்து வந்தால் சுமார் இருபது நாளில் சமையலுக்கு பயன்படுத்தும் அளவிற்கு கடுகுக்கீரை வளர்ந்துவிடும்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! சொட்டு நீர் பாசன கருவிஉங்கள் வேலைகளை குறைத்து, மிக குறைந்த நீர் செலவில் உங்கள் செடிகள் செழிப்பாக வைத்திருக்கும் சொட்டு நீர் பாசன கருவி. மிக குறைந்த விலையில்! |
நோய் தாக்குதல்
கடுகு இலையில் பூச்சி தாக்குதல் குறைவாகவே இருக்கிறது. கடுகு செடியை பெரும்பாலும் சாற்றை உறிஞ்சும் பூச்சிககள் மட்டுமே தாக்குகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர கற்பூரகரைசலை தெளிக்கவும். மேலும் கற்பூரகரைசல் தெளிப்பதன் மூலம் அதிக பூக்கள் பூத்து, கடுகுக்கீரை வளர்ப்பு சிறப்பாக இருக்கும்.
கடுகுக்கீரை பயன்கள்
- கடுகுக்கீரை சுவை மிகுந்தது மேலும் உடலின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் பொட்டாசியம், ஃபோலிக் அமிலம், நார்ச்சத்துகள், வைட்டமின்கள், இரும்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் போன்ற தாதுக்களை உள்ளடக்கியது. எனவே தான் மக்கள் அதிகளவில் சமையலில் பயன்படுகின்றனர்.
- கடுகுக்கீரையில் வைட்மின் கே உள்ளதால் இதய ஆரோக்கியம் தனில் முக்கியமான பங்கு வகிக்கிறது. உடலில் தேங்கி உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கிறது.
- கடுகுக் கீரையில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளதால் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
- காய்கறி சாலட்டுகளில் கடுகு இலையை சேர்த்துக் கொள்ளலாம், மேலும் அனைத்து வகை குழம்புகளிலும் கடுகுக்கீரையை சிறிதளவு சேர்த்து கொள்ளும்போது கூடுதல் சுவையை கொடுக்கிறது.
- கடுகுக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் அஜீரண கோளாறு சரியாகும்.
கடுகுக்கீரையில் அப்படி என்ன இருக்கு என கேட்போரும் உண்டு, அவர்களுக்கெல்லாம் இந்த கட்டுரை நல்ல எடுத்துக்காட்டாக அமையும் என நம்புகிறோம். கடுகுக்கீரை வளர்ப்பு முறை பற்றி பார்த்தோம், நீங்களும் அந்த முறையில் வளர்த்து அதன் முழு பயன்களையும் பெற்று நல்ல ஆரோக்கியத்தோடு வாழ வாழ்த்துகிறோம்.
Comments are closed.