இந்தியன் பாதாம் எனும் வாதுமை என்பது பலராலும் விரும்பி உண்ணப்படும் கொட்டை அல்லது பருப்பை தரக்கூடிய மரமாகும். வாதுமை மரத்திலிருந்து பெறப்படும் கொட்டைகளை வலாங்கொட்டை எனவும் கூறுகின்றனர். இந்தக் கொட்டைகள் ஆரோக்கியமிக்கவை மற்றும் சுவைமிக்கவை. ஆசியாவின் வெப்ப மண்டல நாடுகளில் பெருமளவு இந்தியன் பாதாம் மரம் வளர்ப்பு செய்யப்படுகின்றன.
இந்த மரம் ஒரு இலையுதிர் மரம் ஆகும், ஒரு வருடத்தில் இரண்டு முறை இலைகளை உதிர்த்து விடக்கூடியது. இதன் இலைகள் கரும்பச்சை நிறத்தையுடைய பெரிய இலைகளாக தோற்றமளிக்கும், நாட்கள் செல்ல செல்ல மஞ்சள் நிறத்திற்கு மாறி பின்பு இறுதியாக சிவப்பு நிறத்திற்கு மாறி உதிர்ந்துவிடும். இந்தியன் பாதாம் மரத்தைச் சுற்றி காய்ந்த இலை சருகுகள் எப்பொழுதும் இருக்கும்.
இந்த மரம் 35 மீட்டர் வரை உயரம் வரை வளரக்கூடியது, இந்த மரத்தின் கிளைகள் ஒன்றன்மேல் ஒன்றாக மிக சீராக அடுக்கிவைத்தது போல் குடை வடிவத்தில் அழகாக தோற்றமளிக்கும். விதை மூலம் பாதாம் செடி வளர்ப்பு செய்வது எப்படி, பாதாம் பருப்பு எடுப்பது எப்படி மற்றும் பாதாம் மரம் பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டிஉங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்! |
விதை தேர்ந்தெடுத்தல்
நல்ல பாதாம் பழத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதன் சதைப்பகுதி முழுவதையும் நீக்கிவிடவேண்டும், பிறகு ஒரு இரவு முழுவதும் பாதாம் கொட்டையை நீரில் ஊறவைக்கவேண்டும், அடுத்த நாள் காலை நீரில் உள்ள ஈரப்பதத்தை எடுத்துக்கொண்டு முளைக்கும் திறனுடன் தயாராகிருக்கும்.
பாதாம் விதை நடவு செய்தல்
வீட்டுத்தோட்டத்தில் செறிவூட்டப்பட்ட மண்கலவை நிறைந்துள்ள இடத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். பின்பு ஊறவைத்து தயார் செய்து வைத்துள்ள விதைகளை அதில் பள்ளம் தோண்டி உள்ளே வைத்து மண் போட்டு மூடவும். பிறகு தேவையான அளவு நீர் ஊற்ற வேண்டும், குறிப்பாக நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
மரத்தின் வளர்ச்சி மற்றும் அறுவடை
நடப்பட்ட நாள் முதலே நன்கு பராமரிக்க வேண்டும். மரத்திற்கு சத்து குறைபாடுகள் ஏதேனும் ஏற்படும் பச்சத்தில் இயற்கை உரங்களை அளிக்கலாம். 5 முதல் 6 வருடங்களில் பாதாம் பழங்களை அறுவடை செய்யலாம். இந்த பாதாம் பழம் சிறியதாக முட்டை வடிவத்தில் கூர்மையாக இருக்கும். பச்சை நிற காயாக இருந்து பின்னர் மஞ்சள் நிறத்தில் நார் நிறைந்த ஓட்டின் மீது நல்ல சதை மிக்க பழமாக உருமாறி பின்பு சிவப்பு நிறமாகி கீழே விழும்.
இந்தியன் பாதாம் மரம் பயன்கள்
- இந்தியன் பாதாம் மரத்தின் வேர்கள் மண்ணோடு நன்றாக இருகி மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்கவல்லது, எனவே இதனை நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளிலும், ஆற்றோரங்களிலும் வளர்க்கலாம்.
- இந்தியன் பாதாம் பழத்திலிருந்து பருப்பு எடுப்பது எப்படி என்று முறையாக தெரிந்து அதை அடியேதும் படாமல் வெளியே எடுக்கவேண்டும், தொடர்ந்து இந்த பருப்பை உண்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைந்து நல்ல கொழுப்பு அதிகரிக்கும்.
- பார்ப்பதற்கு குடை வடிவத்துடன் அழகாக காட்சியளிப்பதால் பெரிய தோட்டங்கள் அல்லது பூங்கா அமைக்க நினைப்பவர்கள் அங்கே இந்தியன் பாதாம் மரம் வளர்ப்பு செய்கின்றனர்.
- இந்த வாதுமை மரத்தின் காய்ந்த இலைகளை மீன் தொட்டியுனுள் போட்டால் மீன் ஆரோக்கியமாக வளர்வதாக கூறப்படுகிறது.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாட்டு எரு தொழுஉரம் பைஉங்கள் தோட்டத்திலுள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கைமுறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்! |
வளம் பல தரும் இந்த இந்தியன் பாதாம் மரம் வளர்ப்பு செய்து அதன் நன்மைகள் அனைத்தும் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.
Comments are closed.